Saturday, June 7, 2014

1,406 ஏக்கர் சுவீகரிக்கப்படும்; நாடாளுமன்றில் அரசு அறிவிப்பு 
news
logonbanner-106 ஜுன் 2014, வெள்ளி
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்  பிரதேச செயலர் பிரிவில் ஆயிரத்து 406 ஏக்கர் (1,406.94) காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் காணிகளுக்காக காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும்  இவ்வாறு  நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளது அரசு.
 
நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய  தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, காணி அபிவிருத்தி அமைச்சரிடம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதில்களிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள காணிகள் அரசியல் வாதிகளினாலும், அரசியல் ரீதியாகத் தொடர்புடைய அலுவலர்களாலும் பலவந்தமாகக் கைப்பற்றப்படவில்லை. 2010ஆம் ஆண்டிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் 10 அரச நிறுவனங்களுக்கு 86.08 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிகளின் பெறுமதி இன்னும் மதிப்பீடு  செய்யப்படவில்லை. 
 
இதில் நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் 29.90 ஏக்கர் காணி 3 தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் மதிப்பீட்டுப் பெறுமதி ரூபா 17 மில்லியனாகும் என்றும் காணி அபிவிருத்தி அமைச்சு சபையில் ஆற்றல்படுத்திய பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=605913082506441421#sthash.CBXe1nLh.dpuf