Wednesday, August 20, 2014

மோடியின் அழைப்பில் கூட்டமைப்பின் தலைவர்கள் டில்லி பயணம்
2014-08-20 17:49:08 | General
ரொஷான் நாகலிங்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கடைங்கிய குழுவினர் வியாழக்கிழமை  புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
இக்குழுவினர் எதிர்வரும் 23 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 22, 23 ஆம் திகதிகளில் புதுடில்லியில் தங்கியிருக்கவுள்ள கூட்டமைப்பின் தலைவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாரதீய ஜனதாவின் சிரேஷ்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சுப்பிரமணியன் சுவாமிக்கும் பாதுகாப்பு மாநாட்டுக்கும் என்ன தொடர்பு?; கேள்வி எழுப்புகிறார் அசாத்சாலி
2014-08-20 17:52:51 | General
ரொஷான் நாகலிங்கம்

இந்திய அரசு தமது பக்கம் உள்ளதென்பதை மக்களுக்குக் காண்பித்து ஏமாற்றுவதற்கு இந்தியாவிலிருந்து சுப்ரமணியன் சுவாமியென்ற நகைச்சுவையாளரை அரசாங்கம் அழைத்து நாடகத்தை அரங்கேற்றுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி தெரிவித்ததுடன் பாதுகாப்பு மாநாட்டுக்கும் சுவாமிக்கும் என்ன தொடர்பெனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 
- See more at: http://www.thinakkural.lk/article.php?local/zbuoutaqaf2177bb1662b7c59037xt1sof22a0f905fd59e718ca05ewskvn#sthash.mTdKYwBB.dpuf