A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Sunday, September 28, 2014
மாமாவை கொலை செய்த இராணுவ மருமகன்…
கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரஞ்ஜூராவ பிரதேசத்தில் ஒரகட வீதியில்
நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை
செய்யப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
26.09.2014 அன்று இரவு 7.30 மணியளவில் ரஞ்ஜூராவ பிரதேசத்தில் ஒரகட வீதியில்
இருக்கும் இவரின் வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்வாறு
உயிரிழந்தவர் லொக்குஹேவாகே குலதாஸ (வயது 57) நான்கு பிள்ளைகளின் தந்தை என
அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட கைகலப்பில்
உயிரிழந்த நபரின் நான்காவது மகளை திருமணம் முடித்த மருமகனே இவ்வாறு கொலை
செய்ததாக கினிகத்தேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஏற்கனவே இராணுவத்தில் இருந்ததாகவும் அதிலிருந்து தப்பி வந்தவர்
என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேக
நபரை கைது செய்ததாகவும் 27.09.2014 அன்று சந்தேக நபரை ஹட்டன்
நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்
கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை
கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



