A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Wednesday, October 1, 2014
ராம் ஜெத்மலானி அறிவுறுத்தல்: ஜெயலலிதா தரப்பு அவசர மனு வாபஸ்

ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி
October 1, 2014
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அறிவுறுத்தலின் பேரில் ஜெயலலிதா சிறப்பு
மனுவை இன்றைக்கே விசாரிக்கக் கோரிய அவசர மனுவை அதிமுக வழக்கறிஞர்கள்
திரும்பப் பெற்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜாமீன் கோரும் வழக்கில் ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தண்டனை ரத்து, ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டஜெயலலிதாவின் சிறப்பு மனு மீதான விசாரணையை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தசரா விடுமுறை முடிந்து வழக்கமான அமர்வு ஜாமீன் மனுவை விசாரிக்கும் என
நீதிபதி ரத்னகலா தெரிவித்தார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி
விசாரணையை சிறப்பு அமர்வில் இருந்து வழக்கமான அமர்வுக்கு மாற்றுவதாகவும்
நீதிபதி தெரிவித்தார்.
ஆனால், ஜாமீன் கோரும் ஜெயலலிதாவின் சிறப்பு மனுவை இன்று மாலைக்குள்
விசாரிக்கக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள்
மனு கொடுத்தனர்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் அறிவுறுத்தலின் பேரில்
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த
அவசர மனுவை திரும்பப் பெற்றனர்.
நீதித் துறையிடம் அணுகும்போது நிதானப் போக்கைக் கடைபிடிக்க வேண்டும் என்று
ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம் ராம் ஜெத்மலானி அறிவுறுத்தியதாக
தெரிகிறது.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
