Friday, April 24, 2015

யாழில் ஊடகவியலாளர் கைது
news
logonbanner-123 ஏப்ரல் 2015, வியாழன்
பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தவர்களை, பொலிஸ் வாகனத்தில் சிவில் உடையில் சென்ற பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதன்போது ஊடகவியலாளருடன் தங்கியிருந்த 2 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பிறிதொரு நபர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்களை கைது செய்ததை உறுதிப்படுத்திய பொலிஸார், கைது செய்ததுக்கான காரணம்  எதனையும்  தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.