Monday, April 20, 2015

முகாம்களின் உள்ளவர்களின் விபரங்களை வெளிட வேண்டும்: மெக்ஷ்வல்

Home
Submitted by MD.Lucias on Mon, 04/20/2015
காணமல் போனவர்கள் தொடர்பில் விசாரிக்க விசாரணை குழு ஒன்றை நியமிக்கவும்    தடுப்பு முகாம்கள் மற்றும்  முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிடவும்   அனுமதியளிக்க வேண்டும்  என்று    இடைக்கால அறிக்கை   ஊடாக  ஜனாதிபதியிடம்  கோரிக்கை விடுத்துள்ளோம் என்று  காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின்  தலைவர்  மெக்ஷ்வல் பரணகம தெரிவித்தார். 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்தவாரம் காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஆணைக்குழு   தனது இடைக்கால அறிக்கையை  சமர்ப்பித்திருந்தது.   அது தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
இந்த  ஆணைகுழுவின்   செயற்பாட்டுக்காலத்தை  ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன  மேலும்  ஆறு மாதங்களுக்கு அண்மையில் நீடித்தார். அதனடிப்படையில்    தொடர்ந்து விசாரணை அமர்வுகளை ஆணைக்குழு நடத்தவுள்ளது. 
இந்நிலையில்   இடைக்கால அறிக்கை  தொடர்பில்  காணாமல் போனோர் குறித்த ஆணைக்குழுவின்  தலைவர்  மக்ஷ்வல் பரணகம கருத்து வெளியிடுகையில்
காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் எமது ஆணைக்குழுவானது   ஜனாதிபதிக்கு இடைக்கால அறிக்கையை  சமர்ப்பித்துள்ளது.   அதில் பல கோரிக்கைகைகளை நாங்கள்   விடுத்துள்ளோம்.  குறிப்பாக    காணாமல் போனோர்  தொடர்பாக   எமக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில்       அவற்றை விசாரிக்க  விசாரணைக் குழுவை நியமிக்குமாறு கோரியுள்ளோம். 
அந்தவகையில்   முன்னாள் அரச மற்றும் பொலிஸ் அதிகாரிகளைக் கொண்டும் ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டும்  விசாரணைக் குழுவை அமைத்து  விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும்  தடுப்பு முகாம்கள் மற்றும்  முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிடவும்    இடைக்கால அறிக்கை ஊடாக   அனுமதி கேட்டுள்ளோம். இதற்கான அனுமதி கிடைக்கும் என்று நம்புகின்றோம்.  அனுமதி  கிடைத்தவுடன்   தடுப்பு   முகாம்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர்   தொடர்பான  விபரங்களை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும். 
இதேவேளை  காணாமல் போயுள்ளவர்களின்    உறவினர்களுக்கு உளவள ஆலோசனைகளை  வழங்குவதற்கும்   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இது இவ்வாறு இருக்க    நாங்கள் விசாரணை அமர்வுகளை நடத்திய காலத்தில்   சில அதிகாரிகளுக்கு எதிராக  முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அந்த முறைப்பாடுகள்  தொடர்பாக  நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு கூறியுள்ளோம் என்றார்.