Sunday, June 7, 2015

எரிந்த நிலையில் சடலம் மீட்பு
news
logonbanner-106 ஜுன் 2015, சனி
மட்டுவில் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் எரிந்தநிலையில் மீட்கப்பட்டுள்ளது. 
 
மட்டுவில் பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகிலுள்ள பற்றைக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை கண்ட பொதுமக்கள் சாவகச்சேரி பொலிஸாரிடம் தெரிவியப்படுத்தினர்.
 
குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
இவ்வாறு மீட்கப்பட்டவர் அதேஇடத்தைச் சேர்ந்த சதாசிவம் சபாரட்ணம் (வயது 58 ) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.