Saturday, April 5, 2014

மாகாண சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தலாம்; அவைத்தலைவரிடம் முறையீடு
news
04 ஏப்ரல் 2014, வெள்ளி
logonbanner-1வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலருக்கு தொலைபேசி மூலம் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக உறுப்பினர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்தார்.

இது குறித்து உதயன் இணையத்தளத்திற்கு அவர் தகவல் தருகையில்,

வடக்கு மாகாண சபையில் உள்ள 38 உறுப்பினர்களில் சிலருக்கு இனந்தெரியாத நபர்களினால் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாக என்னிடம் முறையிட்டுள்ளனர்.

அதன்படி அச்சுறுத்தல்தொடர்பில் உரிய பொலிஸ் நிலையங்களில் முறைப்பாட்டினை பதிவு செய்யுமாறும் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

மேலும் முறைப்பாடு செய்யப்படும் இடத்து உறுப்பினர்கள் தமக்கு தனியான பொலிஸ் பாதுகாப்பினையும் கோரக்கூடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=477682829405663578#sthash.qxpwvOX1.dpuf