A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Saturday, April 5, 2014
சார்பாக நிச்சயம் 23 வாக்குகள் கிடைக்குமென வாக்கெடுப்பிற்கு இரு தினங்களுக்கு முன்னர் ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தேன்.
இதேவேளை கடந்த ஜனவரி மாதத்திலேயே, இப் பிரேரணை நிச்சயமாக எவ்வித சந்தேகமும்
இல்லாது வெற்றிபெறும் என ஆரூடம் கூறியிருந்தது சகலருக்கும்
நினைவிருக்கலாம்.
இவ் தீர்மானம் பற்றி நாம் ஆராயுமிடத்தில், உண்மையில் இத் தீர்மானத்திற்கு
சார்பாக 23 வாக்குகள் அல்ல 25க்கு மேற்பட்ட நாடுகள் வாக்களித்திருக்க
வேண்டும்.
ஆனால் கடந்த பாரளுமன்றத் தேர்தலில் மிகவும் படுதோல்வியடைந்த தமிழ் கட்சியை
சார்ந்த நான்கு கோமாளிகள், ஜெனிவாவிற்கு வந்து செய்த கும்மாளத்தினாலும்
நாசகார வேலைகளினாலும் 23க்கு மேல் எந்த நாடும் சார்பாக வாக்களிக்கவில்லை.
இத் தீர்மானத்தில் இவர்கள் நிலைப்பாடு என்பது, சிறிலங்கா அரசிற்கு உரம்
சேர்த்தது மட்டுமல்லாது, சர்வதேச சமுதாயத்திடம் இந்த தீர்மானம் எந்த
பிரயோசனமும் அற்றது எனக் கூறியதுடன், இத் தீர்மானத்தை முன்மொழிந்த
அமெரிக்க, பிரித்தானியா போன்ற நாடுகளை ஏளனமும் செய்தார்கள்.
பிழை காண்பதே வேலை
இதில் வேடிக்கை என்னவெனில், இவர்களது மறைமுக நிலைப்பாட்டிற்கும், ஜனாதிபதி
ராஜபக்சவின் வெளிப்படையான நிலைப்பாடுகளிற்கும் இடையில் எந்தவித
வேறுபாடுகளையும் நாம் காண முடியாது.
காரணம், தமிழ் வாக்காளர்களில் 5000 பேர் தவிர்ந்த வேறு யாரும் தமக்கு
வாக்களிக்காததினால், அவர்கள் தொடர்ந்து பல இன்னல்கள் கஷ்டங்களை அனுபவிக்க
வேண்டும் என்பதற்காக, தொட்டதற்கெல்லாம் சாக்குப்போக்கு கூறுவதும், தமிழ்
தேசியக் கூட்டமைப்பில் பிழை காண்பதையே இவர்கள் தமது கடமையாக கொண்டுள்ளனர்.
இவர்கள் தேர்தலில் தோல்வியுற்ற காலம் முதல் இன்று வரை தமிழ் மக்களுக்கு எதையும் உருப்படியாக செய்தது கிடையாது.
ஜனதிபதி ராஜபக்ச வெளிப்படையாக கூறுவது என்னவெனில், வடக்கு கிழக்கு வாழ்
மக்கள் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை, ஆகையால் நான் ஏன் அவர்களைப் பற்றி
அக்கறை கொள்ள வேண்டும் என்பதே.
யாழிலிருந்து ஜெனிவா வந்த இக் கோமளிகள், ஐ. நா.வில் அடித்த
கும்மாளத்திற்கும் செய்த நாசகார வேலைகளுக்கும் பல சாட்சிகள் உண்டு. இது
பற்றி எழுதுவதானால் பல பக்கங்கள் எழுதலாம்.
வேடிக்கைகள்
ஆங்கிலம் தெரிந்தவர்கள், சட்டம் படித்தவர்கள், படிப்பிப்பவர்கள்
எல்லாரினாலும், ஐக்கிய நாடுகள் சபையினால் முன் வைக்கப்படும் பிரேரணைகளை
புரிந்து கொள்ள முடிகிறதா என்பது சந்தேகத்திற்குரியது.
இவர்கள் ஜெனிவாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குறை சொல்வதுடன், தமிழ்
தேசிய கூட்டமைப்பை பிரிவுபடுத்துவதற்கான வேலைகளையும் மேற்கொண்டார்கள்..
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தீர்மானத்தை ஆதரிப்பதற்காக, இவர்கள் சில
விசமத்தானமான குறைகளை கூறி தம்முடன் இத் தீர்மானத்தை எதிர்ப்பதற்கென ஒரு
குழுவை திரட்டினார்கள்.
மக்களுக்கு சுயநிர்ணய உரிமையின் பாதுகாவலர்களாக முகம் காட்டும் இவர்களில்
ஒருவர், ஐ. நா. மனித உரிமை சபையின், சிறுபான்மையினருக்கான உரிமை என்ற
நிகழ்ச்சி நிரலுக்கு கீழ் உரையாற்றுவதற்கு தனது பெயரை பதிவு செய்து
கொண்டார்.
இந் நிகழ்ச்சி மனித உரிமை சபையில் காலம் கடத்தி 20ம் திகதி நடந்த
காரணத்தினால், கோமாளிகளது பத்திரிகையாளர் மாநாடு எனப்படும் பிரச்சார
கூட்டமும், சிறுபான்மை விடயமும் ஒரே நாளில் நடைபெற்ற காரணத்தினால், இவர்
சபையில் உரையாற்றுவதை தவிர்த்துக் கொண்டார்.
தற்செயலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து யாரும் இச் செயலில் ஈடுபட
முன்வந்திருந்தால், சுயமாக சிந்திக்க முடியாத தமது சில புலம்பெயர் தேசத்து
சகாக்கள் மூலம், இவ் விடயத்தை காட்டுத் தீபோல் பரப்பி, தமிழ் தேசிய
கூட்டமைப்பினருக்கு கரி பூச முனைந்திருப்பார்கள்.
இவர்கள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற் திட்டத்தில், சுயநிர்ணய
உரிமைக்கான விடயம் இல்லையென நொண்டிச் சாட்டு கூறி கூட்டமைப்பிலிருந்து
விலகியவர்கள்.
நாம் இவ்விடயம் மூலம், மக்களது அரசியல் நிலைமைகளை அங்கு கூறுகிறோம் என்பதை
நாம் மறைக்கவில்லை. ஆனால் நாங்கள் யாரும் சுயநிர்ணய உரிமையின்
பாதுகாவலர்களாக மக்களுக்கு ஒரு பொழுதும் நடித்தது கிடையாது.
சர்வதேச பௌத்த நிறுவனம்
ஐ. நா. மனித உரிமை சபை நடைபெற்றவேளையில், மார்ச் 20ம் திகதி, ராஜபக்ச
அரசிற்கு ஆதரவான, சர்வதேச பௌத்த நிறுவனம்” எனும் சிங்களவர்களினால்
நடாத்தப்படும் அமைப்பு, ஓர் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தது.
இக் கூட்டம் பற்றி, 25வது கூட்ட அமர்வு ஆரம்பமாகிய மார்ச் 3ம் திகதியே
பலருக்கு தெரியும். ஆனால் இக்கூட்டம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு
முன்னரே, ஐ. நா.வின் விளம்பரம் மூலம் சகலரும் அறிவார்கள்.
ஆனால் இக் கோமாளிகள், சர்வதேச பௌத்த நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட
அதே தினத்தில் அதே நேரத்திற்கு, ஐ. நா. மண்டபத்திற்கு வெளியில் ஒரு
பத்திரிகையாளர் மாநாடு எனப்படும், தமது பிரச்சாரக் கூட்டத்தை ஒழுங்கு
செய்திருந்தார்கள்.
இதனால் மனித உரிமை சபையில் பங்கு கொள்ளும் ஏறக்குறைய 40 தமிழர்களில், நான்
உட்பட மூவர் மட்டுமே சிங்களவர்களின் சர்வதேச பௌத்த நிறுவனத்தின்
கூட்டத்திற்கு செல்ல முடிந்தது.
மனித உரிமை சபையில் கலந்து கொள்ளும் தமிழர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு
எமது அரசியல் விடுதலைப் போராட்டத்தின் உண்மைகளை சர்வதேச மேடையான ஐ.நா.வில்
கூறாவிடில் தமிழர்கள் ஜெனிவா செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்
உண்மையில் வன்னியிலிருந்து ஜெனிவா வருகை தந்திருந்த பாரளுமன்ற உறுப்பினர்
திரு சிறிதரன், இக் கூட்டத்திற்கு வருவதற்கு சம்மதித்திருந்த பொழுதும், அக்
கூட்டத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்த
காரணத்தினால் இவர் அக் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்து கொள்ளுமாறு
வேண்டினேன்.
அக் கூட்டத்தில் வழமைபோல் தமிழர்களது சரித்திரம் திரிவுபடுத்தப்பட்டு
பொய்யான தகவல்கள், பொய்யான புள்ளி விபரங்களை கூறி சிறிலங்கா
அரசாங்கத்தையும் இராணுவத்தையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
இலங்கைத்தீவின் சரித்திரத்தையே முன்பு அறியாது அங்கு கலந்து கொள்ளும்
வெளிநாட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும்
கொடியவர்களாகவே எண்ணுவார்கள்.
இவ்வேளையில் அங்கு சமூகமளித்திருந்த நாம் மூவரும் தமிழர்களது சரித்திரம்
விடுதலைப் போராட்டத்தின் உண்மைகளை அங்கு கூறி நிலைமைகளை தெளிவுபடுத்தியதும்
அங்கு ஓர் பூகம்பமே வெடித்துவிட்டது.
இக் கூட்டத்தில் சிங்களவர்களுக்கு ஆதரவாக “கூலிக்கு மார்படிக்கும்” சுவிஸ்
நாட்டில் வாழும் ஒட்டுக்குழுவைச் சார்ந்த ஒரு தமிழர், தமிழர்களை கொன்று
குவித்த ராஜபக்ச அரசிற்காக தமிழில் வக்காளத்து வாங்கினார். அங்கு
கூடியிருந்தவர்களில் நால்வர் தவிர்ந்த வேறு யாருக்கும் இவரது அரட்டையும்
அலட்டலும் விளங்கவில்லை.
இதை தொடர்ந்து கொழும்பிலிருந்து வருகை தந்த ஓர் சிங்கள பத்திரிகையின் நிருபருக்கும் எனக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இவரினால் விவாதம் செய்ய முடியாத காரணத்தினால் இவர் மிகவும் கெட்ட
வார்த்தையை அங்கு உபயோகித்தது மட்டுமல்லாது “முடியுமானால் சிறிலங்காவிற்கு
வா பார்ப்போம்? நீ அங்கு வந்தால் ஒன்றில் சிறைக்கு செல்வாய் அல்லது மிகவும்
மோசமான நிலையை சந்திப்பாய்” என என்னை மிரட்டினார்.
மிகவும் வெட்கமான விடயம் என்னவெனில், சிறிலங்கா அரசும், ஜனதிபதி ராஜபக்ச
அரசும் புலம்பெயர் வாழ் தமிழர்கள், சிறிலங்காவின் வளர்ச்சியில் பங்கு கொள்ள
வேண்டுமென கூறி சிறிலஙகாவிற்கு வருமாறு அழைக்கும் அதேவேளை, இந்த
இனத்துவேசி, “முடியுமானால் சிறிலங்காவிற்கு வா பார்ப்போமென சவால்
விடுகிறார்.
நாசகார வேலை
யதார்த்தமான உண்மை என்னவெனில், ஐ. நா. மண்டபத்திற்கு வெளியில் பத்திரிகை
மாநாடுகள், பிரச்சாரக் கூட்டங்கள் என்றும் விரும்பிய வேளைகளில் நடத்த
முடியும். ஆனால் ஐ.நா. மண்டபத்திற்குள் அரச சார்பற்ற நிறுவனங்களின்
கூட்டங்கள், மனித உரிமை சபை வேளைகளிலேயே நடத்த முடியும்.
அத்துடன், இவ்வேளைகளிலேயே, சர்வதேச மேடைகள் அற்ற தமிழர்களாகிய நாம்,
சிங்களவர்களினால் நடாத்தப்படும் “சர்வதேச பௌத்த நிறுவனம்” போன்ற
அமைப்புக்களின் சிறிலங்கா அரச பிரசாரங்களை முறியடிக்க முடியும்.
இந்த நான்கு கோமாளிகள் முற்கூட்டி திட்டமிட்டபடி, எந்த தமிழர்களும்,
சிங்களவர்கள் நடத்திய இக் கூட்டத்திற்கு செல்ல முடியாது போயிருந்தால்,
சிங்களவர்கள் பெரும் வெற்றி கொண்டாடியிருப்பார்கள்.
இக் கோமாளிகளுக்கு இக் கால நேரம் உண்மையில் முக்கியமானதாகவிருந்தால்,
இவர்களது பிரச்சார கூட்டம் பற்றி எத்தனை சுவிஸ் நாட்டின் பத்திரிகையோ
அல்லது வெளிநாட்டு பத்திரிகையோ செய்திகள் வெளியிட்டிருந்தன?.
மிக வேடிக்கையான விடயம் என்னவெனில், இவர்களது கூட்டம் சில தமிழ் ஊடகங்கள் மூலமாக நேரடி ஒளிபரப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இவ் வேளையில் பிரான்ஸின் கல்விமானும், பிரான்ஸ் அரசிடம் “செவலியே” பட்டம்
பெற்ற காலாநிதி ஜோன்-மரி யூலியா (சுகிர்தராஜா), இவர்களது நிலைப்பாடுகள்,
நாட்டில் வாழும் மக்களது எதிர்காலம், இத் தீர்மானத்தை கைவிட்டு விட்டு
வேறு என்ன செய்ய முடியும் போன்ற கேள்வி கணைகளை தொடுத்ததும், ஊடகங்களில்
நேரடி ஒளிபரப்பு யாவும் உடன் துண்டிக்கப்பட்டதுடன், பதிவு நாடாக்கள்
யாவும் நிறுத்தப்பட்டது. அத்துடன் அங்கு எந்த கேள்வி பதில்களும் நேரடி
ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
அதேவேளை இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம், “இத் தீர்மானத்தை முன்வைத்துள்ள
அமெரிக்காவிற்கு நாம் நன்றி கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோமென” கூறியதும், இக்
கோமாளிகளினால், இதுவும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் தான் தமிழர் கூட்டமைப்பின் ஜனநாயகம் பற்றி குறை கூறுபவர்கள்!
குழப்ப நிலை
எது என்னவானாலும், தமிழரிடையே அமெரிக்க தீர்மான விடயத்திலும் ஐக்கியம்
இல்லை என்பதை அரங்கேற்றும் நோக்குடன் ஜெனிவா வந்த கோமாளிகள், தமது
திட்டத்தை திறம்பட நிறைவேற்றினார்கள்.
இதனால்; சில நாடுகள், சில தமிழர்களும் ஜனதிபதி ராஜபக்சவும் விரும்பாத இத்
தீர்மானத்தில் தாம் ஏன் அக்கறை கொள்ள வேண்டுமென கூறி, இத் தீர்மானத்திற்கு
சார்பாக தமது வாக்குகளை பதிவு செய்யவில்லை.
கடந்த தேர்தலில் இக் கோமாளிகளுக்கு 5000 வாக்குகள் தான் கிடைத்தது என்பதை
இந்த நாடுகள் அறிந்திருக்கவில்லை. அதேவேளை புலம்பெயர் தேசங்களில் இவர்களை
ஆதரிப்பவர்கள் மிக அண்மைக்காலங்களில் பல நோக்குகளுடன் அரசியல் தெரியாது
அரசியலுக்கு வந்தவர்களும், தாமாக சிந்திக்க முடியாதவர்களுமே.
மனித உரிமை சபையில் சிறிலங்கா மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் - சீனா,
பாகிஸ்தான், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் ஆற்றிய உரைகளை இவர்கள் ஒழுங்காக
கேட்டிருப்பார்களென நம்புகிறேன்.
ஐ.நா.வில் கூடியிருந்த சில தமிழர் கூறியதாவது, இவர்கள் தமிழ் தேசியக்
கூட்டமைப்பிடம் படுதோல்வி அடைந்தவர்கள், ஆகையால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஆதரிப்பதை எதிர்ப்பதும்;, அவர்கள் எதிர்ப்பதை ஆதரிப்பதுமே இவர்களது
கொள்கையாகும்.
இன்று வரை இவர்கள் தமிழர்களுக்கு நாட்டில் எதை உருப்படியாகச் செய்தார்களென சிலர் வினவினார்கள்.
பத்தரிகையாளர் மாநாடு நடத்துவதும், தமிழர் தேசிய கூட்டமைப்பை குறை
கூறுவதும், பிழைபிடிப்பதுமே இவர்களது நாளாந்த வேலைத்திட்டமென வேறு சிலர்
கூறினார்கள்.
நடந்து முடிந்த 25வது கூட்டத் தொடரில் ஏறக்குறைய 40லிருந்து 50 வரையிலான
தமிழர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களில் சிலர் சிறிலங்கா அரசிற்கும்
ராஜபக்சவிற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை செய்பவர்கள். இன்னும் சிலர்,
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தகவல், படங்கள் சேர்ப்பவாகளாக காணப்பட்டார்கள்.
தற்செயலாக அமெரிக்காவின் தீர்மானம் தோல்வியில் முடிந்திருந்தால், இக்
கோமாளிகள் மக்களுக்கு என்ன ஆறுதலை, எதிர்காலத்திற்கான என்ன வழிமுறைகளை
கூறியிருப்பார்கள்? இன்று வடக்கு கிழக்கு சிங்களமயமாகி வருவது இவர்கள்
கண்களுக்கு தெரியவில்லையா?
தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள், “பேய்க்காட்டப்படுகிறவன் இருக்கும் வரை, பேய்க்காட்டுகிறவனும் இருப்பானாம்”.
இறையாண்மை
ஓரு நாட்டினுடைய இறையாண்மை பற்றி ஐ. நா. தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதோ
இல்லையோ, இவற்றை மதித்தே பிரேரணைகள் நிறைவேற்றப்படுத்தப்படுகின்றன.
சிறிலங்கா மீதான அமெரிக்காவினுடைய தீர்மானத்தின் முன்னுரை பந்தியில் சிறிலங்காவின் இறையாண்மை பற்றி கூறப்பட்டுள்ளது.
இன்று ரஷ்யா, உக்கிரேனின் இறையாண்மையை மதிக்காது தனது படைகளை
உக்கிரேனுக்குள் நகர்த்தியுள்ளது. இந்த நகர்வை சிறிலங்கா ஆதரிக்கிறது.
இவ்வேளையில் சிறிலங்கா எப்படியாக தனது இறையாண்மை பற்றி பேச முடியும்?
மனித உரிமை சபையில் இத் தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை கண்டு - பல
நாடுகள், சர்வதேச அமைப்புக்கள், சர்வதேச வல்லுனர்கள், மனித உரிமை
ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்
இவ்விடயத்தில சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா, வெனிசூலா ஆகிய நாடுகளுடன்
இணைந்து இத் தீர்மானத்தை விவாதிக்கப்பட்டதெனவும், 10வது பந்தியை நீக்க
வேண்டுமென இந்தியா வாக்களிக்காததன் இரகசியம் என்ன?
இத் தீர்மானத்திற்கு இந்தியா நடுநிலை வகித்துள்ளதற்கு மேலாக,
வாக்களிப்பதற்கு முனனர், இந்தியா தூதுவரின் உரையில் பல உண்மைகள்
மூடிமறைக்கப்பட்டுள்ளது.
இத் தீர்மானத்தை வெற்றியின் அடிப்படையில் ஆராயும் பொழுது, சீனா, இந்தியா,
பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவு இல்லாது, அப் பிராந்தியத்தில் அமெரிக்கா
தன்னால் தனித்து நின்று வெற்றியடைய முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதா?
Posted by
Thavam

