Friday, April 4, 2014

வலி. மேற்கில் குடும்ப தகவல் திரட்டும் இராணுவத்தினர்; அச்சத்தில் மக்கள்
news
logonbanner-1 03 ஏப்ரல் 2014, வியாழன்
யாழ் மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினரால் குடும்ப விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக சங்கானை, சித்தங்கேணி மற்றும் வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல்  குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அடிப்படை வசதிகள் உள்ளிட்ட குடும்ப தகவல்களை திரட்டும் சுமார் 42 வினாக்கள் அடங்கிய விண்ணப்ப படிவம் மூலம் இராணுவத்தினரால் பொது மக்களின் விபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக யாழ். மாவட்ட படைத்தரப்பிடம் உதயன் இணையத்தளம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்ட போது இது தொடர்பாக குறித்த பிரதேச ராணுவ அதிகாரியிடம் கேட்டு விட்டு பதில் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=475412824204377697#sthash.GdPLE7si.3MPeYCYF.dpuf