A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Tuesday, September 2, 2014
பிக்குகளின் வற்புறுத்தலினால் 4 முஸ்லிம் இளைஞர்கள் கைது


பிக்குகளின் வற்புறுத்தலை அடுத்து தர்ஹா நகர், வெல்பிட்டி பிரதேசத்தைச்
சேர்ந்த நான்கு முஸ்லிம் இளைஞர் களை அளுத்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பை அடுத்தே இவர்கள் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்ட போட்டியயான்றில் கலந்து
கொண்டுவிட்டு தமது பிரதேசத்தை நோக்கி வந்துள்ளனர். இவர்களுடன் அண்மையில்
அளுத்கமவில் நடந்த கலவரத்தில் காலை இழந்த அஸ்கர் என்பவரும் இருந்துள்ளார்.
இவர்கள் வரும் வழியில் வத்திராஜகொடை என்னும் இடத்தில் வைத்து சிங்கள
இளைஞர்கள் சிலர் கால் இழந்த நிலையிலுள்ள அஸ்கரை கேலி செய்து
அவமானப்படுத்தியதுடன்இ தாக்குதல் நடத்தவும் முயற்சித்துள்ளனர்.
இதையடுத்தே அவ்விருஇளைஞர் குழுக்களுக்கிடையிலும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இரு தரப்பினரும் அளுத்கம பொலிஸில் முறைப் பாடு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அளுத்கம பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி இரு தரப்பினரையும் பொலிஸ்
நிலையத்துக்கு அழைத்து சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் முறைப்பாடுகளை
அவர்கள் வாபஸ் பெற்று சமரசமாகச் சென்றள்ளனர்.
இந்நிலையில்இ சம்பவதினம் இரவு பிக்குமார்களுடன் குழுவொன்று அளுத்கம பொலிஸ்
நிலையத்துக்குச் சென்று முஸ்லிம் இளைஞர்களைக் கைதுசெய்யுமாறு பொலிஸாரை
வலியுறுத்தியுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் வெல்பிட்டிக்குச் சென்று சம்பவத்துடன் தொடர்புடைய
முஸ்லிம் இளைஞர்கள் நால்வரைக் கைதுசெய்துள்ளனர். பின்னர் அவர்களில் மூவர்
விடுதலைசெய்யப்பட்டனர்.
பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டவர்களில் அளுத்கமவில் இடம்பெற்ற கலவரத்தில்
காலை இழந்த அஸ்கரின் சகோதரரும் அடங்குகிறார் என்று தெரியவருகின்றது.

