Sunday, March 31, 2013


Three persons drown in Kattankudy
Four persons went missing while they were bathing with a group of people in the Navaladi river, in Kattankudy, the Police Media Unit told Ceylon Today Online.

Three of the four bodies were found and the police are still in search of the other body.

The police are conducting further investigations. (Ceylon Today Online)
2013-03-31

[ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 10:16.50 AM GMT ]
பதுளையில் இருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் 3 பேரும் ஆசிரியர் ஒருவரும் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரக் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.
இச்சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குப்பட்ட நாவலடி வாவியையும் கடலையும் இணைக்கும் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்றது.
பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலய ஆசிரியர் கந்தசாமி பிரதாபன் வயது 40 நாற்பது, ஹாலிஎல ஊவா விஞ்ஞான கல்லூரியில் 2012ம் ஆண்டு க.பொ.த. சாதாண பரீட்சை எழுதிவிட்டு ஏப்ரல் 10ஆம் திகதி வெளிவரவுள்ள பெறுபெறுகளை எதிர்பார்த்திருந்த மாணவர்களான கனகசபை நிதர்சன் (வயது 17), போல்ராஜ் சாந்தன் (வயது 17), பாலசுப்பிரமணியம் அபிசாந்த் (வயது 17), ஆகியோரே நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.
நீரில் மூழ்கியவர்களில் கணகசபை நிதர்சனை என்ற மாணவனை தவிர ஏனைய மூவரின் சடலங்கள் கடற்படையினராலும் அப்பகுதி மீனவர்களாலும் மீட்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 9 பேர் கடலில் நீராடியுள்ளதுடன் இவர்களில் நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர்.
அண்மையில் இதே கடற்பரப்பில் 2012ம் ஆண்டு க.பொ.த. சாதாரண பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருந்த டிலுஸ்காந் எனும் மாணவன் நண்பனை காப்பாற்றச் சென்ற வேளையில் கடலில் மூழ்கி பலியானமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
பதுளையைச் சேர்ந்த நான்குபேர் மட் நாவலடி கடலில் மூழ்கி மரணம்
க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு போற்றிய பதுளையில் கல்வி கற்கும் 8 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் பதுளையில் இருந்து சுற்றுலாவின் நிமித்தம் மட்டக்களப்பிற்கு வருகை தந்து மட். நாவலடி முகத்துவாரத்தை அண்டிய கடலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி மரணமடைந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் விபரம் வரமாறு:-
போல்ராஜ் போல்சாந்தன் - வயது 17
பாலசுப்ரமணியம் அபிசாந் - வயது 17
கனகசபை யுதர்சன் - வயது 16
கந்தசாமி பிரதாபன் (ஆசிரியர்) – வயது 40 
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.