A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Monday, July 29, 2013
Batti peace seminar disrupted by mob
A seminar on national reconciliation organiseed by a non-governmental
organisation in Batticaloa was disrupted by a group led by a Buddhist
monk in the area on the grounds that an invitation had not been extended
to him for the event, Police said.
They said two participants of the seminar titled ‘National
Reconciliation through the Lessons Learnt and Reconciliation Commission’
were also assaulted by the group.
Police intervened and advised the organisers to call off the seminar.
Accordingly the event was called off. The organisers later lodged a
complaint at the Batticaloa police.
மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் செயற்பாடானது ஆரோக்கியமாகத்
தென்படவில்லை. இவரது காட்டுமிராண்டித்தனமான செயற்பாடானது சிங்கள மக்கள்
மீதும் சிங்கள பேரினவாத அரசின் மீதும் தமிழ் மக்களுக்கு உள்ள சிறிய
நம்பிக்கையினையும் கூட இல்லாது செய்யும் செயற்பாடாகவே உள்ளது.
அவ்வப்போது பொலிஸார் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்தளவுக்குச் சென்றிருக்காது.
மட்டக்களப்பிலேயே மட்டக்களப்பு மக்களுக்கு ஒன்று கூட முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது என்றால் இந்த நாட்டில் அனைத்து மக்களும் நிம்மதியாகவும்
சுதந்திரமாகவும் வாழக் கூடிய நிலையினை தாம் ஏற்படுத்தியுள்ளோம் என இந்த
அரசால் எவ்வாறு சொல்ல முடியும்.
காவி உடையினை அணிந்தால் எதனையும் செய்யலாம் என்ற நிலை சிங்கள பேரினவாத
பிக்குகள் மத்தியில் காணப்படுகின்றது. இதற்கு தமிழ் முஸ்லிம் மக்களை
அடிமையாக்க முடியாது.
பொலிஸாரின் செயற்பாடும் தேரர் இந்தளவு செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.
சாதாரணமாக பிக்கு செய்த செயலை இந்துக் குருவோ இஸ்லாமிய மௌலவியோ
செய்திருந்தால் என்ன நடந்திருக்கும். பொலிஸார் சும்மா விட்டிருப்பார்களா?
ஆனால் சமாதானப் பேரவையின் அரசின் சட்ட திட்டங்களையும் விதிமுறைகளையும்
தெளிவுபடுத்தும் மூவின மக்களும் கலந்து கொண்ட செயலமர்வில் குழப்பத்தை
ஏற்படுத்தி, தமக்கு உதவிக்கு உள்ள காடையர்கள் சகிதம் காட்டு
மிராண்டித்தனமாக தாக்கி விடுதியை பூட்டிவைத்த சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ்
பொறுப்பதிகாரி தேரரைக் கும்பிட்டு பொலிஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு போய்
விடவா எனக் கேட்டால் தேரர் பயப்படுவாரா? மேலும் இவ்வாறான செயல்களை செய்ய
முற்படாரா?.
பொலிஸார் சம்பவ இடத்தில் அவரை கும்பிட்டது, வழியனுப்பிய விதம் மேலும் ஒரு படி தேரருக்கு மேலே செல்ல வைத்துள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்தில் அவரை கும்பிட்டது, வழியனுப்பிய விதம் மேலும் ஒரு படி தேரருக்கு மேலே செல்ல வைத்துள்ளது.
தேரர் இத்துடன் அவரது செயற்பாட்டை நிறுத்தாவிட்டால் அவருக்கு எதிராக தமிழ்,
முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்கான காலம்
நெருங்கி வருவதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், எமது மாவட்ட
மக்களின் வாழ்வுரிமையில் தேரர் தலையிடுவதை அனுமதிக்க முடியாதெனவும்
தெரிவித்தார்.
