A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Wednesday, January 1, 2014
மன்னார் புதைகுழியை ஆராய சர்வதேச நிபுணர் குழு அவசியம்; கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=767702541931338368#sthash.nQhLwsJi.dpuf
Mass grave sign of genocide - TNA MPs
"மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும்
மனிதப் புதைகுழியைத் தோண்டி அதை ஆய்வுசெய்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவை
இலங்கை அரசு உடன் அழைக்க வேண்டும். அப்போது தான் உண்மை கண்டறியப்படும்.
உள்நாட்டு நிபுணர் குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை."
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற
உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா.
மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர் மன்னார் புதைகுழியின்
உண்மை நிலைவரத்தை வெளிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இல்லையெனில், இலங்கை அரசுக்குத்தான் அது ஆபத்தாக அமையும் என்றும் அவர்கள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 20ஆம் திகதி மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியில்
கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து தொடர்ச்சியாக பல மனிதச்
சடலங்களின் எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி
ஆனந்தன், பொன்.செல்வராஜா, பா.அரியநேத்திரன் ஆகியோர் நேற்றுக் கருத்துக்களை
வெளியிட்டனர்.
இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:
"போர் நடைபெற்ற காலத்தில் இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமற்போன தமிழ்
உறவுகளின் எலும்புக்கூடுகளே மன்னார் - திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து
மீட்கப்பட்டிருக்கலாம் என மன்னார் ஆயர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன், இதுதொடர்பில் சர்வதேச விசாரணை உடன் தேவை என்றும் அவர்
வலியுறுத்தியுள்ளார். அவரின் இந்த வலியுறுத்தலை தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு வரவேற்கின்றது.
மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க இது தொடர்பில் சர்வதேச விசாரணை உடன்
தேவை. ஏனெனில், இந்த மனிதப் புதைகுழி இனப் படுகொலைக்கு ஒரு சான்றாக
இருக்கின்றது.
இந்தப் புதைகுழியைத் தோண்டி அதை ஆய்வுசெய்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவை
இலங்கை அரசு உடன் அழைக்கவேண்டும். அப்போதுதான் உண்மை கண்டறியப்படும்.
தற்போது புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிபுணர்
குழுவில் எமக்கு நம்பிக்கை இல்லை. அவர்கள் அரசின் கருத்துகளுக்கே
செவிசாய்ப்பார்கள்.
நத்தார் தினம், புதுவருடம் என்று அடிக்கடி புதைகுழியைத் தோண்டும் பணியை
நிறுத்திவைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இவ்வாறு புதைகுழியை தோண்டும்
பணிகள் திடீர்திடீரென நிறுத்தப்படுவது எமக்குப் பெரும் சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி போன்று இதனையும் கிடப்பில் போட அரசு முயற்சிக்கக்
கூடாது. தனக்குக் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற அச்சத்தில் மன்னார்
புதைகுழியின் உண்மை நிலைவரத்தை அரசு மூடிமறைக்கக் கூடும்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடர்
ஆரம்பமாவதற்கு முன்னர் மன்னார் புதைகுழியின் உண்மை நிலைவரத்தை வெளிப்படுத்த
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இலங்கை அரசுக்குத்தான் அது
ஆபத்தாக முடியும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி யைப் பெற்றுக்கொடுக்க வேண்
டும், குற்றமிழைத் தவர்களுக் குத் தண்டனை வழங்க வேண்டும், சர்வதேசத்தில்
நல்ல பெயரை எடுக்கவேண் டும் என்ற நல்ல நோக்கங்கள் உண்மையாகவே இலங்கை
அரசுக்கு இருக்குமானால் இதனை அரசு உடனடியாகச் செய்யவேண்டும்" - என்றனர்.
மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க இது தொடர்பில் சர்வதேச விசாரணை உடன்
தேவை. ஏனெனில், இந்த மனிதப் புதைகுழி இனப்படுகொலைக்கு ஒரு சான்றாக
இருக்கின்றது.
Mass grave sign of genocide - TNA MPs
31 December 2013
Supporting
the Bishop of Mannar’s call for an international investigation into the
mass grave found at Mannar, TNA MPs Suresh Premachandran, Sivasakthy
Ananthan, Pon Selvarajah, and P. Ariyenthiran called for international
experts to investigate the grave.
Expressing “suspicion”
with regards to the frequent suspension in the excavation of the grave,
the MPs asserted that the mass grave indicates “proof of genocide” and
that a domestic investigation team could not be trusted and would only
repeat the views of the government.