A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Thursday, January 30, 2014
ஜெனீவாவில் அரசாங்கத்துக்கு உதவப் போவதில்லை: ஐதேக
Translate this page
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 ஜனவரி, 2014
இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்கால குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாணசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விஜேதாஸ ராஜபக்ஷ கூறினார்.
இதுபற்றி பிபிசி தமிழோசை கேள்வி எழுப்பியபோது, 'வடக்கு மாகாணசபைக்கு சர்வதேச தலையீட்டை கோருவதற்கான தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அரசியலமைப்பின்படி அதிகாரம் இல்லை' என்று விஜயதாஸ ராஜபக்ஷ கூறினார்.
ஆனால், இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ள வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன்,'மக்களின் கருத்தே தீர்மானமாக வெளிப்பட்டிருக்கிறது' என்று கூறியுள்ளமையை விஜேதாஸ ராஜபக்ஷவிடம் தமிழோசை சுட்டிக்காட்டியது.
'வடக்கு மக்களுக்கு வேறு வழியில்லை'
'யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குவதாக அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதபடியாலேயே, வடக்கு மக்கள் தங்களின் கருத்தை தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறார்கள்' என்றார் ராஜபக்ஷ.
'யுத்தம் முடிந்த பின்னர். வடக்கு மக்களுக்காக அரசு என்ன செய்ய வேண்டும் என்று எமது நாட்டின் எல்எல்ஆர்சி அறிக்கை பரிந்துரை செய்திருக்கும்போது, அவை தொடர்பில் எமது நாட்டின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கிவிட்டு அவற்றை நிறைவேற்றாமல் இருக்கின்றனர்' என்றார் அவர்.
வடக்கின் அபிவிருத்தியே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு என்று அரசாங்கம் காட்ட முயல்வதாகவும், 'தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் சிலரை கொண்டுசென்று, வடக்கு மக்கள் அரசாங்கத்துடன் தான் இருக்கிறார்கள்' என்று சர்வதேசத்துக்கு இந்த அரசு காட்டப்பார்க்கிறது என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ கூறினார்.
இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணையை நடத்த ஐநா தலைமைச் செயலர் பான் கி மூனுக்கு அதிகாரம் அளிப்பதாக அரசாங்கம் ஏற்கனவே உடன்பட்டிருப்பதாகவும் அதனை பல்வேறு ராஜதந்திர தகவல் பரிமாற்றங்களில் அரசு உறுதிசெய்திருப்பதாகவும் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையே நடந்துள்ள நேரடியாக தகவல் பரிமாற்றங்களையும் அரசு வழங்கிய உறுதிமொழிகளையும் அடியொற்றியே இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை ஜெனீவா கவுன்சிலுக்கு வருவதாகவும் அதில் நாட்டின் எதிர்க்கட்சிகளுக்கு பங்கு இல்லை என்றும் அவர் தமிழோசையிடம் கூறினார்.
எனவே, ஜெனீவாவில் இலங்கை மீது வரவுள்ள புதிய தீர்மானத்தை அரசாங்கம் தனியாகவே எதிர்கொள்ள நேரிடும் என்றும் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.