Saturday, March 1, 2014

ஆரியகுளத்தில் மேலும் ஒரு புத்தர்சிலை; இன்று திறந்து வைப்பு

news
logonbanner-1
26 பெப்ரவரி 2014, புதன்
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியில் உள்ள நாகவிகாரையில் மேலும் ஒரு புத்தர்சிலை இன்றைய தினம் கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உதுஹம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க தேரரால் திறந்து வைக்கப்பட்டது.

மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் கண்டி அஸ்கிரிய பீடத்தை சேர்ந்த உதுகம ரத்னபால சிறி புத்தராக்கித மகாநாயக்க தேரர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இந்துமத குருமுதல்வரை சந்தித்து கலந்துரையாடினார்.

அதனையடுத்து நாகவிகாரைக்குச் சென்று புத்தர் சிலை ஒன்றினையும் திறந்து வைத்து பிரித்ஓதி வழிபாட்டில் ஈடுபட்டார்.

மேலும் குருநகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலும் புத்தர் சிலை ஒன்று திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=186232683327396359#sthash.BqE9rOTC.dpuf