Saturday, March 29, 2014

உடையார்கட்டில் இளைஞர் கைது
news
logonbanner-1
28 மார்ச் 2014, வெள்ளி
முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்படடுள்ளார்.

உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை சிறிகாந்தன் என்பவரே நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்த இவர் உடையார் கட்டுப்பகுதியில் வசித்து வருகின்றார். கடந்த சில நாட்களுக்கு முன் இதே பகுதியில் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிய விசேட தேவையுடைய ஒருவர்  கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை  ரி.ஐ.டி யினரால் இதுவரை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=324602793729256296#sthash.zF0HFzYs.dpuf