கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது
இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து
50க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் இன்று காலை கச்சத்தீவு அருகே
மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் மோகன் என்பவருக்குச் சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் மரிய எட்வர்ட்,
விஸ்வநாதன், பாஸ்கரன், ரோனிமஸ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மீனவர்களை தாக்கிய கடற்படையினர் படகில் இருந்த மீன்பிடி வலை, ஜி.பி.எஸ்.
கருவி மற்றும் உணவு பாத்திரங்கள் போன்றவற்றை கடலுக்குள் வீசினர்.
குடிபோதையில் இருந்த இலங்கை கடற்படையினர் கட்டை, இரும்பு தடி மற்றும்
பிளாஸ்டிக் கயிறு ஆகியவற்றைக் கொண்டு மீனவர்களை தாக்கியதுடன், ‘இனிமேல்
எங்கள் பகுதிக்குள் வரக்கூடாது’ எனக்கூறி அடித்துள்னர்.
இதையடுத்து, இன்று காலை கரை திரும்பிய மீனவர்கள் சிகிச்சைக்காக ராமேஸ்வரம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புலனாய்வுத்துறை
அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட நிலையில்,
மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியிருப்பது மீனவர்கள் மத்தியில்
பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
From
the 58 Indian Fishermen Sri Lankan jails will be released by the Indian
Coast Guard Brought back to Karaikal port Tonight, Reported foreign
media. HANDING The Indian Coast Guard in Turn will
be released over 17 Lankan Fishermen From Their Ten Indian jails while
BOATS will also be returned to Sri Lankan Navy at the international
maritime boundary line today.
Indian
media reported that 58 Indian Tamil fishermen released from Lankan jail
and their 11 boats will also be handed over to Indian Coast Guard by
Lankan Navy. They will reportedly be handed over to their local
Fisheries authorities and sent back to their villages.