Monday, April 28, 2014

அரசாங்கம் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்:சுமந்திரன்

Home Mon, 04/28/2014
யுத்த குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீன விசாரணைகளை நடத்த ஒத்துழைக்காவிடின் பாரிய  விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். போரின் போது பாலியல் கொடுமைகளை ஆயுதமாகப் பயன்படுத்தியமை சாதாரண விடயமல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 
வடக்கில் தொடர்ந்தும் இராணுவ முகாம்களை வைத்திருப்பது ஜனநாயக செயல் அல்ல. இராணுவத்தை வெளியேற்ற அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 
 
போரின் போது இராணுவம் பாலியல்  வல்லுறவை ஆயுதமாக பயன்படுத்தியுள்ளமையென ஐ.நா. தெரிவித்துள்ள அறிக்கை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு யுத்தத்தின் போது இராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது பாலியல் கொடுமைகளையும் செய்தனர் என்ற குற்றஞ்சாட்டி 2009ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவடைந்த காலத்திலேயே முன்வைக்கப்பட்டது. இதனை அரசாங்கம் விசாரணைகளுக்கு உட்படுத்தி நியாயமான தீர்வொன்றினையும்  காண்பதாக  நம்பிக்கையளித்தும் இன்று ஐந்து ஆண்டுகளாகியும் அவை தொடர்பில் கவனத்திற் கொள்ளவில்லை.
 
ஐ.நா. செயலாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையானது வெறுமனே இலங்கையை மாத்திரம் சுட்டிக் காட்டியதல்ல. இலங்கை உட்பட 21நாடுகள் இப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே பாலியல் வல்லுறவை ஆயுதமாக பயன்படுத்தி பெண்களை சீரழித்தமையினை சாதாரணதொரு சம்பவமாகக் கொள்ள முடியாது. இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் இப்போது எக்காரணங்களை குறிப்பிட்டாலும் அதை எவரும் நம்பப் போவதில்லை.