Thursday, May 29, 2014

வவுனியா கல்மடு மகா வித்தியாலைய கலைப்பிரிவு மாணவனை காணவில்லை!

வவுனியா கல்மடு மகா வித்தியாலைய கலைப்பிரிவு மாணவனை காணவில்லை!
வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மகாலிங்கம் றஜீவன் எனும் 17 வயதுடைய மாணவன் நேற்று (27.05.2014 அன்று) காணாமல் போயுள்ளதாக அறிய முடிகின்றது. 
கடந்த 27.05.2014 அன்று தரணிக்குளம் சாஸ்திரி கூழாங்குளம் எனும் முகவரியில் அமைந்துள்ள தனது வீட்டிலிருந்து, அதிகாலை 5.00 மணிக்கு பத்து கிலோ பயிற்றங்காய்களுடன் புறப்பட்டு, வவுனியா நகரப்பகுதியிலுள்ள தினசரி சந்தையில் வியாபாரியிடம் கொடுத்த பின்னர், தான் பயணித்த மிதிவண்டியை குறித்த வியாபாரியின் மரக்கறி விற்பனை நிலையத்துக்கு முன்பாக நிறுத்தி விட்டு, எதிர்ப்புறமாகவுள்ள காகிதாதிகள் (பாடசாலை உபகரணங்கள்) விற்பனை நிலையத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. 
இந்த சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸ் நிலையத்திலும், தரணிக்குளம் பொலிஸ் நிலையத்திலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடமும் மாணவனின் பெற்றோரால் முறையிடப்பட்டுள்ளது.