Saturday, January 3, 2015

[ சனிக்கிழமை, 03 சனவரி 2015, 12:23.53 PM GMT ]
தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதை அறிந்து கொண்டுள்ள ராஜபக்சவினர் தமது புதல்வர்கள் பயன்படுத்தும் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான 6 ரேஸ் பந்தய கார்களை வெளிநாடு ஒன்று அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது.
தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ள ராஜபக்சவின் அடிவருடிகள் தமது பெறுமதியான ரேஸ் பந்தய கார்களை யாருக்கும் தெரியாமல் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார்.
கடந்த 31ம் திகதியே 4 ஆடம்பர கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க, சமையல் எரிவாயு ஒப்பந்த பேரங்களுடன் சம்பந்தப்பட்ட இரண்டு பிரதான அதிகாரிகள் மூல கோப்புகளை எதிர்க்கட்சிக்கு கிடைக்கச் செய்து விட்டு நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 9ம் 10ம் திகதிகளில் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் பயணச்சீட்டுகள் விற்பனை செய்யப்படாமல் புளொக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விமான பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டது என பயணிகளுக்கு கூறியே அந்த விமானங்கள் புளொக் செய்யப்பட்டுள்ளன.
விசேட குழுவொன்று நாட்டில் இருந்து செல்லவே இந்த விமானங்கள் இவ்வாறு புளொக் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.