A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Thursday, January 1, 2015
திடீரென உடல் எடை குறைவதற்கான காரணம் என்ன ?
நம்மில் பலருக்கு நம் உடல் எடைகுறைவதை அறியமுடியாத நிலை உள்ளது. உடல் எடை
கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பலவீனம் நமக்கு ஏதோ ஒரு விதத்தில்
தெரியவரும்போதுதான் மருத்துவரை அணுகுகிறோம். குறிப்பாக பெண்கள் உடல் எடை
குறைவதை ஒரு பாக்கியமாகவே கருதுகின்றனர். இது தவறான போக்காகும்.
உடல் எடைகுறையக் காரணங்கள்:
1.பட்டினி, பசியின்மை, சத்துணவு இல்லாமை, வலி, கவலை, உறக்கமின்மை, அசதி என்கிற உணவு சார்ந்த காரணங்கள்.
2. விழுங்குவதில் ஏற்படும் சிரமங்கள், நாக்கு பாதிப்படைவது, தொண்டைக் கோளாறு, ஹிஸ்டீரியா, டெட்டணி, அழற்சி மற்றும் கட்டிகள்.
3. உணவுகளை கிரகிக்க முடியாத தன்மை, தொடர்ந்து வரும் வாந்தி, பேதி, குடல் அடைப்புகள்.
4. வயிற்றில் புற்றுக் கட்டிகள் இருந்தாலும் உடல் இளைத்துவிடும்.
5. குடல் காரணமான, அமிபியாசிஸ், அல்சர் குடல் அழற்சி, பூச்சிகள், குடல் காச நோய்.
6. கணையம், கல்லீரல், சார்ந்த கட்டிகள் கணைய அழற்சி, கல்லீரல் சுருங்கி விடுவது.
7. இதய உள்தசை அழற்சி, இதயச் செயல்பாட்டில் குறைபாடு.
8. பார்க்கின்சன் வியாதி, முற்றிய டேபஸ் வியாதி, சதை அழிவு நோய்கள்.
9. மணம் சார்ந்த உணவு வெறுப்பு நோயான அனோரெக்சியா, நெர்வோசா.
10. நீரிழிவு, தைராய்டு நச்சுத் தன்மை, அடிஷன் வியாதி, சிமெண்ட் வியாதி போன்ற நாளமில்லா சுரப்பி சார்ந்த வியாதிகள்.
11. ஊன்ம ஆக்கச் சிதைவு சார்ந்த பல்வேறு கட்டிகள் நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு.
12. வைட்டமின் குறிப்பாக பி வைட்டமின்
13. அடிபடுவது அல்லது அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் நைட்ரஜன் சீர் குறைவு.
14. காச நோய், நாள்பட்ட மலேரியா போன்ற தொற்று நோய்கள்.
15. ரத்தம் சார்ந்த வியாதிகளான் லூக்கிமியா, ஏபிளாஸ்டிக் சோகை.
16. குடிப் பழக்கம், மருந்தடிமைத்தனம், அதிகமாக புகைப்பிடிப்பது.