Saturday, January 3, 2015

எமது புதிய தேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்கள் ஒதுக்கப்பட மாட்டார்கள் : ராஜித சேனாரத்ன

HomeSat, 01/03/2015
ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் தமிழ் மக்­க­ளுக்கு தீர்வு கிடைக்­கா­ததன் கார­ணத்­தி­னா­லேயே கடந்த பத்து ஆண்­டு­க­ளாக தமிழ் பிர­தி­நி­திகள் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றனர். தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்க விரும்­பா­மல் பிரி­வி­னை­யினை அர­சாங்கம் தூண்டி விடு­கின்­றது என தெரி­விக்கும் பொது எதி­ர­ணி­யினர், எமது தேசிய அர­சாங்­கத்தில் தமிழ் மக்கள் ஒதுக்­கப்­ப­ட­மாட்­டார்கள். அவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டப்­ப­டு­மெ­னவும் குறிப்­பிட்­டது.
பொது எதி­ர­ணி­யுடன் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இணங்கி செயற்­ப­டு­வது தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு கிடைக்கும் தீர்­வுக்­கான சந்­தர்ப்­பத்­தினை இழக்கும் செய­லென அர­சாங்கம் குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் இது தொடர்பில் பொது எதி­ரணி உறுப்­பினர் ராஜித சேனா­ரட்­ன­ எம்.பி.யிடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்;
கடந்த முப்­பது வரு­டங்கள் நாட்டில் யுத்தம் நில­விய சூழ்­நி­லையில் பாதிப்­புக்கள் மூவின மக்­க­ளையும் சார்ந்­தி­ருந்­தது. எனினும் யுத்தம் முடி­வ­டைந்து இன்று நாட்டில் சிங்­கள முஸ்லிம் மக்கள் சுதந்­தி­ர­மாக செயற்­பட்­டாலும் தமிழ் மக்கள் இன்றும் அச்­சு­றுத்­த­லான சூழ­லி­லேயே வாழ்ந்து வரு­கின்­றனர். வடக்கு கிழக்கில் இன்றும் தமிழ் மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். தமது காணிகள் சொத்­துக்கள் இன்­னமும் உரிய நபர்­க­ளுக்கு சென்­ற­டை­ய­வில்லை. யுத்த கால­கட்­டத்தில் இடம்­பெ­யர்ந்த மக்கள் இன்­னமும் குடி­ய­மர்த்­தப்­ப­ட­வில்லை.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இது தொடர்பில் பல தட­வைகள் அர­சுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தியும் பல­னேதும் கிடைக்­க­வில்லை என்­பதை நானும் ஏற்றுக் கொள்­கின்றேன். ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு தீர்­வினை பெற்றுக் கொடுப்­பதில் உண்­மை­யி­லேயே அக்­கறை காட்­ட­வில்லை. ஒரு சிலர் அரசில் இருந்து கொண்டு பேச்­சு­வார்த்­தைக்கு தயா­ரா­கிய போதிலும் குடும்ப ஆட்­சி­யா­ளர்­களின் அழுத்­தங்கள் அவை அனைத்­தையும் தடுத்து விட்­டது. எனினும் தற்­போது பொது எதி­ர­ணி­யொன்று உரு­வா­கி­யி­ருப்­பது சிறு­பான்மை மக்­க­ளுக்கு மிகப் பெரிய நம்­பிக்­கை­யாக மாறி­விட்­டது. தமிழ் முஸ்லிம் மக்கள் தமது உரி­மை­களை வென்­றெ­டுக்­கவும் சுதந்­தி­ர­மாக வாழவும் நல்­ல­தொரு சந்­தர்ப்பம் ஏற்­பட்டு விட்­டது.
அதேபோல் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தற்­போது எடுத்­துள்ள தீர்­மானம் வர­வேற்­கத்­தக்­க­துடன் தமிழ் மக்­களின் எதிர்­கா­லத்­தினை கருத்தில் கொண்டு நல்­ல­தொரு தீர்­மா­னத்­தினை எடுத்­துள்­ளனர். எனவே தற்­போது எம்­முடன் சிங்­கள தமிழ் முஸ்லிம் தலை­மைகள் அனைத்தும் ஒன்­றி­ணைந்து விட்­டது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட மலை­யக தமிழ் கட்­சிகள் மற்றும் ரிசாத் பதி­யுதீன், பைசர் முஸ்­தபா போன்றோர் பலர் எம்­முடன் கைகோர்த்து சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வினை பெற்­றுக்­கொ­டுக்­கும; ஒரே நோக்கில் அதற்­கான நம்­பிக்­கையில் கைகோர்த்­துள்­ளனர்.
எனவே இன்னும் ஒரு வார காலத்தில் உருவாகவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு எட்டப்படும். சிறுபான்மை மக்களையும் இந்த நாட்டின் உண்மையான நாட்டுப் பற்றுள்ள பிரஜைகளாக வாழ இடம் ஏற்படுத்திக் கொடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.