A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Tuesday, June 2, 2015
போதைப் பாவனையை வடக்கில் திட்டமிட்டே அறிமுகம் செய்தார்கள் - க.வி.விக்னேஸ்வரன்
எமது
இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி ஒரு காலத்தில் அரசுகளையே ஆட்டிப் படைத்து
வந்துள்ளனர். அப்போதிருந்த அரசுகளால், வெளிநாட்டு உதவியைப் பெற்று பெரும்
செலவுடன்தான் அவர்களை அழிக்க முடிந்தது. தமிழ் இளைஞர்கள் இனியும் ஒன்று
சேரக் கூடாது.
ஒருமித்துச் செயற்படக் கூடாது. கல்வியில் சிறந்து விளங்கக்கூடாது. சுதந்திர
எண்ணங்கள் அவர்கள் மனதில் எழக் கூடாது. விடுதலை வெறி அவர்களுள் கொழுந்து
விட்டு எழக் கூடாது.
அவர்களை நடைப் பிணங்களாக்க வேண்டும் என்ற எண்ணம், சில அதிகார பீட
அலுவலர்களிடமும், அரசியல்வாத அமைச்சர்களிடமும் எழுந்தது. வடக்கு, கிழக்கு
இளைஞர்கள் பலரை அழித்து ஒழித்து விட்டோம். ஆனால் அவர்கள் மீண்டும்
எழமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? என்று அவர்கள் சிந்தித்தார்கள்
அதற்காகவே போதைப் பொருள்களை இங்கு திட்டமிட்டு அறிமுகம் செய்தார்கள்.
இவ்வாறு நேற்றுக் குற்றஞ்சாட்டினார் வடக்கு மாகாண முதலமைச்சர்
க.வி.விக்னேஸ்வரன். உதயனின் உலகக் கிண்ண கிரிக்கெட் கொண்டாட்டத்தின்
பரிசளிப்பு நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார் அவர்.
தனது உரையில் அவர் தெரிவித்ததாவது:
மாணவர்களே உஷாராக இருங்கள் குறுக்கு வழியில் மனமருட்சியைப் பெற
எத்தணிக்கும் செயற்பாடுதான் போதைப் பொருள் பாவனை. ஆனால் மிகவும் கொடிய
பாதிப்புக்களை இவை ஏற்படுத்தக் கூடியன. யார் யாரோ வேண்டும் என்றே
திட்டமிட்டு போதைப் பொருள்களைக் கல்லூரிகளிலும், பாடசாலைகளிலும்
விநியோகித்து அதன் பாவனையை ஊக்குவித்து வருகின்றார்கள். சிறு கடைகளில்
எல்லாம் சிறிய பொதிகளில் பல்வேறு பெயர்களில் அவற்றை
விநியோகிக்கின்றார்கள்.
காலத்திற்கு காலம், அவற்றை அறிமுகம் செய்யும் மார்க்கங்கள் மாற்றப்பட்டு,
வெவ்வேறு விதங்களில் எமது மாணவர்களுக்கு அவற்றை கிடைக்க வைக்கும்
பிரயத்தனங்கள் தொடரந்து நடந்து வருவது தெரிகின்றது. இவற்றை
விநியோகிப்பவர்களை நாங்கள் அடையாளம் காணும் வரையில், எமது மாணவச்
செல்வங்கள்தான் உஷாராக இருந்து தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ள முன்
வரவேண்டும்.
திடசங்கற்பம் எடுங்கள்
சாரயம், சிகரெட் போன்றவற்றின் பாவனையிலும் பார்க்க போதைப் பொருள் பாவனை மிக
அபாயகரமான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. அண்மையில் புங்குடுதீவில்
இடம்பெற்ற வன்புணர்விலும் கொலையிலும் ஈடுபட்டவர்கள் போதைப் பொருள்
பாவனைக்கு அடிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப் பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று மாணவ சமுதாயம்
திடசங்கற்பம் எடுத்தால்தான் அதனை ஒழிக்க முடியும். மனமிருந்தால்தான்
மார்க்கம் உண்டு. திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க
முடியாது. அதேபோல் போதைப் பொருளை ஒரு பொருட்டாகக் கருதமாட்டோம், அதனைத்
துச்சமெனத் தூக்கியயறிவோம் என்று மாணவர்கள் நினைக்க முன்வந்தால்தான், அதன்
பாவனையை நிறுத்த முடியும்.
பலவித அரசியல், பொருளாதார, புலணுணர்வு சார்ந்த காரணங்களுக்காக எம்மிடையே
இந்தப் போதைப் பொருள் விநியோகம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தப்
போதைப் பொருள் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் முக்கியமான அரசியல்
காரணங்களும் உண்டு.
விடுதலையுணர்வை சிதைக்கும் ஆயுதம்
எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி ஒரு காலத்தில் அரசுகளையே ஆட்டிப் படைத்து
வந்துள்ளனர். அப்போதிருந்த அரசுகளால், வெளிநாட்டு உதவியைப் பெற்று பெரும்
செலவுடன்தான் அவர்களை அழிக்க முடிந்தது. தமிழ் இளைஞர்கள் இனியும் ஒன்று
சேரக் கூடாது. ஒருமித்துச் செயற்படக் கூடாது. கல்வியில் சிறந்து விளங்கக்
கூடாது. சுதந்திர எண்ணங்கள் அவர்கள் மனதில் எழக் கூடாது.
விடுதலை வெறி அவர்களுள் கொழுந்து விட்டு எழக் கூடாது. அவர்களை நடைப்
பிணங்களாக்க வேண்டும் என்ற எண்ணம், சில அதிகார பீட அலுவலர்களிடமும்,
அரசியல்வாத அமைச்சர்களிடமும் எழுந்தது. வடக்கு d கிழக்கு இளைஞர்கள் பலரை
அழித்து ஒழித்து விட்டோம். ஆனால் அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள் என்பது
என்ன நிச்சயம்? என்று அவர்கள் எண்ணினார்கள். அதற்காகவே போதைப் பொருள்களை
இங்கு திட்டமிட்டு அறிமுகம் செய்கிதார்கள். தமிழ் இளைஞர்கள் போதைப்
பொருளுக்கு அடிமையாகி, அவர்கள் தங்களது சுய நினைவையும், சுயமரியாதையையும்,
சுய சிந்தனைகளையும் மறந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
பணம் புரட்டுவதும் நோக்கம்
எமது இளைஞர்களிடையே போதைப் பொருள்களை அறிமுகம் செய்யப்பட ஒரு அரசியல்
காரணம் பின்னணியில் இருந்து வந்துள்ளது என்பதை அறிய வேண்டும். போதைப்
பொருள்களை விநியோகம் செய்பவர்களை எமக்குக் காட்டிக் கொடுக்க மாணவ சமுதாயம்
முன்வர வேண்டும். இந்தச் சதியிலிருந்து தப்ப முயற்சிக்க வேண்டும்.
சில அமைச்சர்கள், உயர் பதவிகளில் இருந்தவர்கள், சில காலத்திற்கு முன்
அதிகாரத்தில் இருந்த பலர் அண்மைக் காலம் வரையில் போதைப் பொருள் விநியோகத்
தொழில் மறைமுகமாக ஈடுபட்டிருந்தார்கள்.
இதனை தற்போதைய அரசு கண்டறிந்துள்ளது. ஆகவே செல்வாக்கு மிகுந்தவர்களின்
உந்துதலின் பேரில் இந்தப் போதைப் பொருள் விநியோக வியாபாரம் வடக்கில் நடந்து
வந்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம்.
பணம் புரட்டுவதும் அவர்களது நோக்கம். அதனால் சீரழிவது எமது மாணவ இளம்
சந்ததியினர். நன்மை அடைவது, பெரும் பணம் படைத்தவர்களும் இடைத் தரகர்களும்
மாணவ முகவர்களும்.
அடையாளம் காட்ட முன்வாருங்கள்
இளைஞர்கள் இடத்தில் புலணுணர்வைத் தூண்டி விட்டால், முதலில் அவர்கள் போதைப்
பொருள் பாவனையாளர்களாகத் தொடங்கி பின்னர் அதற்கு அடிமையாகிக் கடைசியில்
போதைப் பொருள் விற்பவர்களாகவும் மாறி விடுகின்றனர். போதைப் பொருள்
பாவனைக்கு அடிமையானால் அதிலிருந்து தப்ப முடியாது.
எனவே தொடர்ந்து அதனைப் பாவிப்பதற்கு பணம் வேண்டும். அதனால்தான், அவர்கள்
விற்பவர்களாகவும் மாறுகின்றனர். இதனால்தான் முதலில் அறிமுகம்
செய்தவர்களையும், விநியோகத்தவர்களையும் நாம் அடையாளம் காண முடியாது
போகின்றது.
விரைவில் மத்திய அரசுடன் இணைந்து, போதைப் பொருள் பாவனை ஒழிக்க போதிய
விழிப்புணர்வு நிகழ்சிகளிலும் குணமாக்கும் நடவடிக்கைகளிலும் நாம்
ஈடுபடவுள்ளோம்.
போரின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியையும் மக்களின்
தேவைகளையும் பூர்த்தி செய்ய என்ன கருமம் ஆற்ற வேண்டும் என்பதில்
பத்திரிகைகள் தமது முழு நாட்டத்தையும் செலுத்த வேண்டும். அதே நேரத்தில்
மக்களின் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும் ஏதுக்களை கண்டறிந்து வெளிக்
கொண்டு வர வேண்டும்.
தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள்
எமது குற்றங்குறைகள் எதுவாக இருந்தாலும் சுட்டிக்காட்டுங்கள். எமது மக்கள்
அறிவுக் கூர்மையும் திறமையுங் கொண்டவர்கள். புதியனவற்றை தேடும் இயல்பினர்.
அவர்களைச் சரியான பாதையில் திசை திருப்பினோம் என்றால், ஏனைய மாகாணங்கள்
எல்லாவற்றிலும் பார்க்க சகல துறைகளிலும் முன்னணியில் நிற்கக்கூடியவர்கள்.
அதற்காக ஊடகங்கள் தமது பங்கைச் செய்ய முன்வர வேண்டும்.
வடக்கிலுள்ள ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றமாகப் பரிசீலித்து, அவற்றிலுள்ள
குறைபாடுகளை பத்திரிகைகள் வெளிக்கொண்டுவர வேண்டும். அந்தக் கிராமத்தில்
செய்யக்கூடிய செயற்பாடுகள் பற்றித் தெரியப்படுத்தி, மாகாணசபை அவற்றைச்
செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கலாம். இதனூடாக இந்த விடயங்கள் உலகறியச்
செய்யப்படும்.
இதனை வெளிநாடுகளிலுள்ள, ஏதேனும் உள்ளுராட்சி மன்றம் வசதியற்ற எமது உள்ளுராட்சி மன்றங்களை வளர்சியடையச் செய்யக் கூடும்.
எமது ஊடகங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் செயலாற்ற
முன்வரவேண்டும். அப்படிச் செயலாற்றுகிறார்கள். இன்னமும் செய்ய வேண்டும்.
போதைப் பொருள் விற்பனையாளர்கள் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவோர்
பற்றியும் எமக்கு எடுத்துரைக்க முன்வரவேண்டும். இது ஊடகத்தில் உள்ளவர்களின்
உரிமையுடனான உத்தம பங்கு. அதை ஆற்றுவீர்கள் என்று எதிர்பார்கின்றேன்
என்றார்.