A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Thursday, June 30, 2016
காணாமற்போன பிள்ளையார், அம்மன்
தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டறவுச் சங்கம் அமைந்திருந்த இடத்துக்கு அருகில்
இருந்த மூன்று ஆலயங்களில், , பிள்ளையார் மற்றும் அம்மன் ஆலயங்கள் முற்றாக
அழிவடைந்துள்ளதாகவும் வீரபத்திரர் ஆலயம் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும்அப்பகுதி
மக்கள் தெரிவித்தனர்.
வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து
கடந்த சனிக்கிழமை விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணிகளை மக்கள்
பார்வையிட்டு வருகின்றனர்.
1990ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு முன்னர் அப்பகுதியில் அருகருகே மேற்படி 3
கோவில்களும் இருந்துள்ளன. தற்போது, சென்று பார்க்கையில் வீரபத்திரர் ஆலயம்
பற்றை மண்டி சேதமடைந்துள்ள நிலையில் உள்ளதுடன், ஆலயத்தின் மணிக்கோபுரமும்
உள்ளது.
ஆனால், அவற்றுக்கு அருகில் அமைந்திருந்த பிள்ளையார் மற்றும் அம்மன் ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.