A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Wednesday, August 31, 2016
“உதயன்“ மீதான தாக்குதலுக்கு டக்ளஸே பொறுப்பு! ஈ.பி.டி.பி .யின் உறுப்பினர் ஆதாரத்துடன் தெரிவிப்பு
உதயன் பத்திரிகை, தினமுரசு வாரமலரின் ஆசிரியர் அற்புதன் நடராஜன் மற்றும்
மகேஸ்வரி உட்பட யாழில் நடைபெற்ற முக்கிய கொலைகளுடன் ஈழ மக்கள்
ஜனநாயகட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல உறுப்பினர்கள்
சம்பந்தப்பட்டுள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நீண்டகால உறுப்பினர்
சு.பொன்னையா குறிப்பிட்டுள்ளார்
.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர்
சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்களை
முன்வைத்தார். தொடர்ந்து குறிப்பிட்ட அவர்,
‘அரசாங்கத்துடன் இணைந்து வெள்ளைவான் கடத்தல் உள்ளிட்ட பல விடயங்களை
செய்தவர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரே. உதயன் பத்திரிகை தாக்குதலின்போது
அங்கு இருந்தேன். அந்த தாக்குதலை இராணுவத்தினரும் உடனிருந்தே செய்தார்கள்.
சாள்ஸ் என்பவேர வெள்ளை வான் கடத்தல்கள் உள்ளிட்ட பல கொலைகளுக்கு பிரதானமாக
இருந்தவர். நெடுந்தீவில் அரச உத்தியோகத்தர் நீக்கிலஸ் கொலைகள் பற்றியும்
பொலி ஸாருக்கு அறியப்படுத்தினேன். ஆனால், பொலிஸார் எந்த நடவடிக்கையும்
மேற்கொ ள்ள வில்லை.
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு சிலர்
யாழ்ப்பாணத்தில் தற்போதும் இருக்கின்றார்கள். சிலர் வெளிநாடுகளில்
இருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் கொலைச் சம்பவத்துடன் தொடர்படையவர்களை
கைதுசெய்தால், மேலும் உண்மைகளை அறிய முடியும்.
இந்த தாக்குதலின் போது காயமடைந்த ராஜன் மற்றும் திவாகரன் ஆகியோரை பலாலி
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்கள் தற்போதும் உயிருடன்
இருக்கின்றார்கள். உதயன் பத்திரிகை மீது தாக்குதல் மேற்கொண்டவர்களும்,
தாக்குதலை தூண்டியவர்களும் யாழ்ப்பாணத்தில் தான் தற்போதும்
இருக்கின்றார்கள்.
நெல்லியடி, புங்குடுதீவு, காரைநகர், யாழ்ப்பாணம, வவுனியா உள்ளிட்ட
பகுதிகளில் நடைபெற்ற கொலைகள் மற்றும் வெள்ளைவான் கடத்தல்களுக்கு முக்கிய
காரணமானவர்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தான்.
மகேஸ்வரி உட்பட தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதராஜா உள்ளிட்டவர்களை
தனிப்பட்ட காரணத்தின் ஊடாக கொலை செய்தார்களே தவிர, விடுதலைப் புலிகள் கொலை
செய்யவில்லை.
தாங்கள் செய்த கொலையினை விடுதலைப்புலிகள் செய்தார்கள் என விடுதலைப்புலிகள்
மீது குற்றத்தினை சாட்டினார்கள் என்றும் அவர் பல திடுக்கிடும் உண்மைகளை
ஊடகவியலளர்களுக்கு வெளிப்படுத்தினார்.