Friday, March 3, 2017

மங்கள சமரவீரவை நேரடியாக எதிர்த்த ச.வி.கிருபாகரன்


March 2, 2017
இலங்கையால் ஏற்பாடு செய்யப்பட்ட அமர்வில், இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் கூறியுள்ளார்.
அது மட்டும் இன்றி உங்கள் செயற்பாடு எல்லோரது நேரத்தையும் வீண்விரையமாக்கும் செயற்பாடு என தனது கடுமையான எதிர்ப்பை வெளிநாட்டு பிரதிநிதிகள் மத்தியில் இலங்கை வெளிவிவகார அமைச்சரை சுட்டிக் காட்டி வெளிப்படுத்தியுள்ளார்.
ச.வி.கிருபாகரனின் கருத்தானது இலங்கை அரச தரப்பை குழப்பத்துக்குள்ளாக்கியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கப் பிரதிநிதியாக, இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் எரின் பார்க்லே ச.வி.கிருபாகரன் அவர்களின் கருத்தை மிக உன்னிப்பாக முன்னால் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




கேள்விகளால் தடுமாறி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை இலங்கைக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர்