A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
A Brief Colonial History Of Ceylon(SriLanka)
Sri Lanka: One Island Two Nations
(Full Story)
Search This Blog
Back to 500BC.
==========================
Thiranjala Weerasinghe sj.- One Island Two Nations
?????????????????????????????????????????????????Saturday, April 26, 2014
கசினோவுக்கு எதிராக வாக்களிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பில்லை - சுமந்திரன்
கசினோ
சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி
அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு
முதுகெலும்பு இல்லாது போய் விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில்
தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற செயல்
நுனுக்க அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில்
கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமந்திரன் எம்.பி இங்கு மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேற்படி கட்டளையான கசினோ
சூதாட்டத்தை கொண்டதான நிகழ்ச்சி நிரல் இல்லை என்று இங்கு அமைச்சர்களால்
கூறப்படுகின்றது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கதைகளைக் கூறி மக்களை திசை திருப்புவதாகவும் அமைச்சர்கள் கூறுகின்றனர்.
எனினும் மாநாயக்க தேரர்களே இவ்விடயத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை திருத்தியமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆகவே தான் மனச்சாட்சி
உள்ள ஆளும் கட்சி உறுப்பினர் சூதாட்டத்தைக் கொண்ட பிரேரணை மீதான
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் நின்று விடாது ஆளும்
கட்சியின் பங்காளியான அத்துரலியே ரத்ன தேரர் எதிர்த்து வாக்களித்தார்.
இந்நாட்டில் கடைப்பிடிக்கப்படுகின்ற நான்கு மதங்களுமே சூதாட்டத்தை வெறுக்கின்றன.
சூதாட்டத்தின் மூலம் மனைவியை இழந்தமை, சொத்துக்களை இழந்தமை, சகோதரங்களுக்கிடையே கொலைகள் இடம்பெற்றமை என்பவற்றை வரலாறுகள் கூறுகின்றன.