Wednesday, February 25, 2015

[ செவ்வாய்க்கிழமை, 24 பெப்ரவரி 2015, 07:39.44 AM GMT ]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தால் எந்தவித அரசியல் கலப்புமில்லாமல் திட்டமிட்டபடி, ஐ.நா சபையின் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும் அதனை உடன் வெளியிடுமாறு வலியுறுத்தியும் இன்று நடாத்தப்பட்ட அமைதிப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இந்தப் பேரணியில் பொதுமக்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற, வட மாகாண உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.