Tuesday, June 2, 2015

[ திங்கட்கிழமை, 01 யூன் 2015, 07:00.26 AM GMT ]
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியல் நீடித்து ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி சந்தேகநபர்கள் ஒன்பது பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை சுமார் 1 மணி நேரம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி லெனின் குமார், சந்தேகநபர்களை 15.06.2015 ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான சான்றுப் பொருட்கள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன். இன்றைய தினம் வித்தியா குடும்பத்தின் சார்பில் 6 வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.